போலந்து நாட்டினைச் சேர்ந்த ரம் தயாரிப்பு நிறுவனமான டிக்டேடர், நிறுவனத்தை வழி நடத்துவதற்காக ‘மிகா’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மனித உருவ எந்திர மனிதனை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
முதல் பெண் எந்திர மனித தலைமை நிர்வாக அதிகாரியாக, டிக்டேடர் நிறுவனத்தின் சார்பாக அதன் செயல்பாடுகளை வழிநடத்தும் குழு உறுப்பினர் ஆக மிகா இடம் பெற்றுள்ளது.
அதே சமயம், டிக்டேடர் நிறுவனத்தின் கூற்றுப்படி, மிகாவிற்கு கௌரவப் பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது .
வார்சாவில் நடைபெற்ற 2023/24 ஆம் ஆண்டு காலேஜியம் ஹ்யூமானம் பல்கலைக் கழக திறப்பு விழாவில் இந்தப் பெண் மனித உருவம் கொண்ட எந்திரத்திற்கு விருது வழங்கப் பட்டது.
மேடையில் உரை நிகழ்த்திய மிகா செயற்கை நுண்ணறிவின் பலத்தைக் குறித்து எடுத்துரைத்தது.