மனித கடத்தல் பற்றிய UNODC அமைப்பின் உலகளாவிய அறிக்கை
December 17 , 2024 5 days 85 0
2019 ஆம் ஆண்டு பெருந்தொற்றிற்கு முந்தைய புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் உலகளவில் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதம் அதிகரிப்புப் பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளவில் கட்டாய உழைப்பு என்பதற்காக கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆனது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் 31 சதவீதம் அதிகரித்துள்ளதோடு பெண்களில் இது 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகளவில் கடத்தலால் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட நபர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் (2022 ஆம் ஆண்டில் 61 சதவீதம்) பெண்கள் மற்றும் சிறுமிகளாக உள்ளனர்.
இதில் கடத்தலால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட சிறுவர்களில் 45 சதவீதம் பேர் கட்டாய உழைப்புக்காக கடத்தப் படுகிறார்கள் என்பதோடு மேலும் 47 சதவீதம் பேர் பிற நோக்கங்களுக்காக சுரண்டப் படுகிறார்கள்.
மொத்தத்தில், வெவ்வேறு நாட்டினைச் சேர்ந்த குறைந்தபட்சம் சுமார் 162 பேர், 2022 ஆம் ஆண்டில் 128 வெவ்வேறு நாடுகளுக்கு கடத்தப் பட்டுள்ளனர்.