எதிர்காலத்திற்கு துல்லிய அளவில் நோய்களை குணப்படுத்துத் தன்மையுடைய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கென உதவி புரிவதற்காக வேண்டி ஒரு லட்சம் மக்களின் மரபணு கட்டமைப்பை (genetic makeup) ஆவணமிடுவதற்காக (Documenting) உலகின் மிகப்பெரிய மனித மரபணுத் தொகுதி (Human Genome) ஆராய்ச்சித் திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது.
ஜீவாங்க் மற்றும் ஹீய் (Zhuang ernd Hui) இனத்தவர் உட்பட 5 மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையுடைய 9 இனச் சிறுபான்மையினர் (ethnic minority) மற்றும் நாடு முழுவதுமுள்ள ஹான் (Han) இனப்பெரும்பான்மையினரின் (ethnic majority) மரபணுத் தகவல்கள் பற்றிய தரவுகள் இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும்.
சேகரிக்கப்பட்ட அனைத்து மரபியத் தகவல்களின் படி, மரபணு வரிசையாக்கமும் அவற்றின் மீதான ஆய்வுகளும் நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படும்.
இவ்வாறு முடிக்கப்பெற்றால், இதன் மூலம் இதுவே உலகின் வேகமான மரபணுத் தொகுதி பொறியியல் திட்டமுமாகவும் (Genome Engineering) உருவாகும்.