உலக வங்கியானது மனித மூலதனக் குறியீடு 2020 திருத்திய பதிப்பு : கோவிட் – 19 நோய்த் தொற்றுக் காலத்தில் “மனித மூலதனம்” என்ற பெயர் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடானது நாடுகளிடையே மனித மூலதனத்தின் முக்கியக் கூறுகளை எடுத்துக் காட்டுகின்றது.
இந்தியாவானது 2020 ஆம் ஆண்டில் 116வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியாவானது 157 நாடுகளிடையே 115வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டு இருந்தது.
இந்த ஆண்டில் இந்தியாவானது 174 நாடுகளிடையே 116வது இடத்தைப் பிடித்து உள்ளது.
எனினும் இந்தியாவின் மதிப்பெண் ஆனது 2018 ஆம் ஆண்டில் 0.44லிருந்து 2020 ஆம் ஆண்டில் 0.49 ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்திலும் ஹாங்காங், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதற்கடுத்தடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
மனித மூலதனம்
இது சமூகத்தின் திறன் மிக்க உறுப்பினர்களாக தங்களது திறன்களை உணரச் செய்வதற்காக வேண்டி தங்களது வாழ்நாளில் மக்கள் அடைந்த அறிவு, திறன்கள் மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளது.