அறிவியலாளர்கள், மனித நியூரான்களைப் புதிதாகப் பிறந்த எலிகளில் பொருத்தி அவற்றை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளனர்.
இந்த எலிகள் மனநலக் கோளாறுகளை ஆராய்ச்சி செய்யவும், அவற்றிற்கு எதிரான சிகிச்சைகள் குறித்து சோதிக்கவும் உதவுகின்றன.
எலிகளின் உடலில் பொருத்தப்பட்ட இந்த மனித நியூரான்கள் எலியின் உடலுக்கு மீண்டும் சமிக்ஞைகளை அனுப்ப முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து முடிவு செய்தனர்.
மனித மூளை வளர்ச்சி மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் பற்றிய தற்போதையப் புரிதலை மேம்படுத்துவதில் இந்த ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கும்.