TNPSC Thervupettagam

மனித வள அறிக்கை - UNDP

March 31 , 2019 1972 days 665 0
  • சமத்துவமின்மையின் மீது கவனத்தைச் செலுத்தும் 2019 ஆம் ஆண்டின் மனித வள மேம்பாட்டு அறிக்கையானது (Human Development Report - HDR) ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் (United Nations Development Programme - UNDP) வெளியிடப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் HDR ஆனது 21-வது நூற்றாண்டை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சமத்துவமின்மையின் பல வடிவங்கள் குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.
  • இந்த அறிக்கையானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொருளாதார அறிஞரான மெகபூப் உல் ஹக் மற்றும் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த அறிக்கையின் நோக்கமானது பொருளாதார விவாதம், கொள்கை மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை வளர்ச்சி குறித்த செயல்பாடுகளின் மையத்தில் வைக்க வேண்டும் என்பதாகும்.
  • இந்த அறிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்