TNPSC Thervupettagam

மனிதக் கழிவகற்றல் பணியாளர் குறித்த கணக்கெடுப்பு

October 5 , 2024 51 days 111 0
  • இதுவரை பதிவு செய்யப்பட்ட 38,000 மனிதக் கழிவகற்றல் பணியாளர்களில் 91.9% பேர் பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அல்லது இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
  • பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில், 68.9% பேர் SC, 14.7% பேர் OBC, 8.3% பேர் ST மற்றும் 8% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், நாடு முழுவதும் குறைந்தது 377 பேர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மிகவும் அபாயகரமான முறையில் (பாதுகாப்பு அம்சங்கள் இன்றி) சுத்தம் செய்யும் பணியின் போது உயிரிழந்துள்ளனர்.
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது, அதன் நமஸ்தே திட்டத்தின் ஒரு பகுதியாக சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் விவரக்குறிப்பு (SSWs) பதிவினை மேற்கொள்கிறது.
  • இந்தத் திட்டமானது அனைத்து சாக்கடை சுத்திகரிப்புப் பணிகளையும் இயந்திரமயம் ஆக்குவது மற்றும் அபாயகரமான துப்புரவுப் பணிகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில், மனிதக் கழிவகற்றல் பணி செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு (SRMS) மாற்றாக இந்தத் திட்டம் கொண்டு வரப் பட்டது.
  • பன்னிரண்டு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் விவரக்குறிப்பு பதிவினை நிறைவு செய்துள்ள அதே நேரத்தில் 17 மாநிலங்களில் இந்த செயல்முறை நடைபெற்று வருகிறது.
  • தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகியவை இந்த SSW பணியாளர்களுக்காக தங்கள் சொந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன என்பதோடு அவை இந்தத் திட்டத்தின் கீழ் தகவல்களை மத்திய அரசிற்கு தெரிவிக்காமல் உள்ளன.
  • அடையாளம் காணப்பட்ட 43,797 மனிதக் கழிவகற்றல் பணியாளர்களில் 97.2% பேர் SC சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இதில் ST, OBC மற்றும் இதரப் பிரிவினரின் பங்கு தலா 1% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்