TNPSC Thervupettagam

மனிதக் கழிவினை மனிதனே அகற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைத்த கேரளா

January 15 , 2018 2535 days 920 0
  • ’ஜென்ரோபாட்டிக்ஸ்’ எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தினுடைய இளம் பொறியாளர் குழுவினரால் ’பந்திகூட்’ (Bandicoot) என்றழைக்கப்படுகின்ற ரோபோட் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • புதை சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு ரோபோட்களை பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பப் பரிமாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கேரள நீர் ஆணையம் மற்றும் கேரள ஸ்டார்ட் அப் மிஷன் இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • இந்த ரோபோட்டானது, அருகலை (Wi-fi) மற்றும் ஊடலை (Bluetooth) வழியாகத் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படக் கூடியதாகும். இது அழுத்தப்பட்ட காற்றினை சக்தியாகக் கொண்டு செயல்படுகிறது.
  • இந்த ரோபோட், மிகவும் வெறுக்கத்தக்கதும், சட்டப்படி தடை செய்யப்பட்டதுமான மனிதக் கழிவினை மனிதனே அள்ளும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாய் விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்