தற்போது புதிய தொல்பொருள் சான்றுகள் பொருளாதாரச் சமத்துவமின்மையானது சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாகக் கூறுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலும் உள்ள சுமார் 2,99 க்கும் மேற்பட்ட தொல்பொருள் தளங்களிலிருந்து தரவுகளைப் பதிவு செய்து பல தொன்மையானக் குடியிருப்புகளின் உலகளாவிய தொல்லியல் தரவுத் தொகுப்பில் பொருள்சார் சமத்துவமின்மை மற்றும் நிலைத்தன்மையைப் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
ஒவ்வொரு தளத்திற்கும், 0 (முறையான சமத்துவம்) முதல் 1 (அதிகபட்ச சமத்துவம் இன்மை) வரையிலான பொருளாதாரச் சமத்துவமின்மையின் பொதுவான அளவீடான கினி குணகத்தை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர்.
பொருளாதாரச் சமத்துவமின்மை என்பது தனிநபர் அல்லது குழுக்களிடையே காணப் படும் செல்வம் மற்றும் வளங்களின் சமமற்றப் பரவலைக் குறிக்கிறது.