குவாண்டம் விசையியல் பற்றி அறிய உதவும் உலகின் அதிவேக சுழலியினை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இச்சுழலி நிமிடத்திற்கு 60 பில்லியன் சுழற்சிகளுக்கும் மேலான சுழற்சி வேகத்தில் சுழலும். இது மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் அதிவேக சுழலி ஆகும்.
இது பல்துளையிடும் இயந்திரத்தை விட 1,00,000 மடங்கு அதிக வேகம் கொண்டதாகும்.
அதிவேக சுழலியினை உருவாக்குவதற்காக அறிவியலாளர்கள் சிலிக்காவினால் உருவாக்கப்பட்ட நானோ அளவிலான டம்பெல்லினை செயற்கையாக உருவாக்கி லேசரினை பயன்படுத்தி அதிக வெற்றிடத்தில் மிதக்க வைத்துள்ளனர்.