இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation - ISRO), 2021-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் மனித விண்வெளிப் பயண மையத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்புதிய அமைப்பு பெங்களூருவில் அமையவிருக்கிறது.
இது இஸ்ரோவில் உள்ள அனைத்துவித மனிதனின் விண்வெளி நடவடிக்கைகள் தொடர்பான செயல்களுக்கு பொறுப்பானதாக இருக்கும். மேலும் மூத்த விஞ்ஞானி உன்னிகிருஷ்ணன் நாயரை அதன் இயக்குநராகக் கொண்டு ஒரு புதிய மேலாண்மை கட்டமைப்பில் அது செயல்படும்.
மேலும் இஸ்ரோவின் தலைவர் கே. சிவன் ககன்யான் என்னும் திட்டத்திற்கான இயக்குநராக ஆர். ஹட்டன் என்பவரை நியமித்தார். ஹட்டன் தற்போது பிஎஸ்எல்வி குறைந்த எடை வாகனத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றார்.