மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முதலாவது திட்டமான ககன்யான் திட்டத்தில் ISRO மற்றும் விண்வெளி நடவடிக்கைகளுக்கான அரசு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) ஆகியவை இணைந்து பணியாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளன.
இது சம்பந்தமாக ISRO மற்றும் ரஷ்யாவின் மத்திய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ரோஸ்கோஸ்மோஸ் ஆனது இந்திய விண்வெளி வீரர்களுக்கு சோயுஸ் (Soyuz) விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS – International Space Station) ஒரு குறுகிய பயணத்தை வழங்குகிறது.
ISS ஆனது குறைமட்ட புவிப்பாதையில் பயணிக்கும் செயற்கையான வாழத்தகுந்த செயற்கைக்கோளாகும்.