TNPSC Thervupettagam

மனிதர்களில் அரிதான வகையில் புபோனிக் பிளேக் நோய் பாதிப்பு

April 6 , 2024 104 days 240 0
  • மிகவும் அரிதான வகையில் மனிதர்களில் புபோனிக் பிளேக் நோய் பாதிப்பு ஆனது அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
  • செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைகள் மூலம் இந்தத் தொற்று பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • புபோனிக் பிளேக், 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட "கருப்பு மரணம்" என்று அழைக்கப் படும் ஒரு பெருந்தொற்றின் போது ஐரோப்பாவின் மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதி மக்களின் உயிரைப் பலி வாங்கியது.
  • அபாயகரமானதாக இருந்தாலும் குணப்படுத்தக் கூடியதாக உள்ள இந்த நோய் ஆனது, வளர்ச்சியடைந்த நாடுகளில் மிகவும் அரிதானதாகவே உள்ளது.
  • புபோனிக் பிளேக் என்பது யெர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
  • பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட தெள்ளுப்பூச்சிகள் அல்லது உண்ணிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்