TNPSC Thervupettagam

மனிதர்களில் தாவரப் பூஞ்சைகளின் தாக்கம்

April 11 , 2023 596 days 300 0
  • கொல்கத்தாவைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒரு ஆட்கொல்லி வகை தாவரப் பூஞ்சையால் பாதிக்கப் பட்டுள்ளார்.
  • இந்த அரிய வகை நோய்க் கிருமியால் தொற்று ஏற்படுவது உலகில் இதுவே முதல் முறையாகும்.
  • மனிதர்களில் பூஞ்சை நோய்கள் ஏற்படுவது மிக அரிதானவை அல்ல.
  • அறியப்பட்ட மில்லியன் கணக்கான பூஞ்சை உயிரினங்களில், சில நூறு இனங்கள் மட்டுமே மனிதர்களில் அதிக தீங்கு விளைவிக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.
  • படர்தாமரை, சேற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் ஆகியவை பொதுவாக நம் சருமத்தின் ஈரமான பகுதிகளில் உருவாகி சரும எரிச்சலை உருவாக்கும்.
  • பொதுவாக அழுகும் தாவரங்களை உண்ணும் அஸ்பெர்கிலஸ் போன்றப் பூஞ்சை இனங்கள், நம் உடலின் தோல் பகுதிகளைப் பாதிக்கக் கூடியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்