TNPSC Thervupettagam

மனிதர்களில் நிபா நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசி பரிசோதனை

January 19 , 2024 311 days 339 0
  • ஐக்கியப் பேரரசின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆனது, கொடிய நிபா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான முதல் மனிதப் பயன்பாட்டுத் தடுப்பூசி சோதனைகளை தொடங்கி யுள்ளது.
  • ChAdOx1 NipahB தடுப்பூசியின் சோதனைகள், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 51 நபர்களின் மீது மேற்கொள்ளப்பட்டது.
  • ஒரு பேரழிவுகரமான நோயான நிபா வைரஸ் சுமார் 75% பாதிப்புகளில் பெரும் உயிர் பலியினை ஏற்படுத்தக் கூடியது.
  • சிங்கப்பூர், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • நிபா வைரஸ் பழ வெளவால்களால் பரவுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட விலங்குகளுடனான தொடர்பு (பன்றிகள் போன்றவை) அல்லது மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு மூலமும் பரவுகிறது.
  • நிபா வைரஸ் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்