TNPSC Thervupettagam

மனிதர்கள் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (MPATGM)

September 17 , 2018 2261 days 698 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனிதர்களால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது மகாராஷ்டிராவின் அஹமத் நகர் வரம்பிலிருந்து இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • MPATGM (Man Portable Anti-Tank Guided Missile) ஆனது DRDO ஆல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையாகும் (anti-tank guided missile - ATGM).
  • இது ஏவிய பின் தொலைந்து போகும் வகையில் செயல்படும் திறனுடையது மற்றும் இது இந்திய இராணுவத்தில் தற்போது சேவையில் உள்ள கீழ்க்காண்பவற்றிற்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பிரான்சில் உருவான இரண்டாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘மிலன்’ மற்றும்
    • ரஷ்யாவின், மித தானியங்கி கம்பி வழி இயங்கு இணைப்பால் வழிநடத்தப்படும் ஏவுகணை ‘கொங்கூர்’.
  • தற்போது இந்திய இராணுவமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு (ATGM) ஏவுகணையான “நாக்” ஐ தனது படையில் கொண்டுள்ளது. ஆனால் இது இராணுவத்தின் முக்கிய தேவையான எளிதில் தூக்கிச் செல்லக்கூடியதாக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்