இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் ஹரியானா மாநிலத்தின் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசித் திட்டப் பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பிரச்சாரம் ஹரியானா முதல்வரால் 25 ஏப்ரல் 2017 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தின் கீழ் 9 மாதங்கள் முதல் 15 வயதுடைய ஏறக்குறைய 85 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி இடப்படும்.
ஹரியானாவின் தலைமைச் செயலாளர்S. தேசாய் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி பிரச்சாரத்திற்கான மாநில அளவிலான வழிகாட்டும் குழுவின் சந்திப்பில் இந்தப் பிரச்சாரத்தை 5-6 வாரங்களுக்கு தொடர்வதென முடிவு எடுக்கப்பட்டது.