மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி சமீபத்தில் காலமானார்.
அமைப்பு சார் திறன்கள் மற்றும் அடிமட்டச் சமூகத்துடனான தொடர்பிற்கு பெயர் பெற்ற ஜோஷி சிவசேனாவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
1995 ஆம் ஆண்டில் இவர் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவர் இந்திய தேசிய காங்கிரஸின் சரத் பவாரை அடுத்து பதவியேற்றார் என்ற நிலையில் இது அந்த மாநிலத்தில் முதல் முறையாக சிவசேனா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதைக் குறிக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மக்களவையின் சபாநாயகராகப் பணியாற்றினார்.