இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ரியாத்தில் நடந்த மன்னர் சல்மான் உலக சதுரங்க விரைவு மற்றும் அதிவேக (Blitz and Rapid) சாம்பியன் ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
ஆனந்த் பிரான்ஸ் நாட்டைச் மேக்சிம் வாசியர் லாக்ரேவ் என்பவருக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டரான இயன் நேபோம் நியாசிட்சிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியைத் தழுவினார்.
நடப்பு உலக சாம்பியனான கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சென் உக்ரைனின் ஆண்டோன் கோரோபோவைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பெண்கள் பட்டம் இறுதிச் சுற்றில் அர்மீனியாவின் எலினா டேனிலியனுடன் சமன் செய்த ஜார்ஜியாவின் நானா ஜானிங்ஜி என்பவரால் வெல்லப்பட்டது.
விஸ்வநாதன் ஆனந்த்
விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை 1988-ல் வென்றார். இவர் 2000 முதல் 2002 வரை FIDE உலக செஸ் சாம்பியன் ஷிப்பை வென்ற முதல் ஆசியர் ஆவார்.
இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கான உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னாவை 1991ல் பெற்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.
2007-ல் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம விபூசன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு வீரர் என்ற முறையில் இவரே இவ்விருதினை முதன் முறையாகப் பெறுகிறார்.