TNPSC Thervupettagam

மன்னர் சல்மான் – உலக சாம்பியன் ஷிப் போட்டி

January 1 , 2018 2391 days 811 0
  • இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ரியாத்தில் நடந்த மன்னர் சல்மான் உலக சதுரங்க விரைவு மற்றும் அதிவேக (Blitz and Rapid) சாம்பியன் ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
  • ஆனந்த் பிரான்ஸ் நாட்டைச் மேக்சிம் வாசியர் லாக்ரேவ் என்பவருக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
  • இந்தப் போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டரான இயன் நேபோம் நியாசிட்சிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியைத் தழுவினார்.
  • நடப்பு உலக சாம்பியனான கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சென் உக்ரைனின் ஆண்டோன் கோரோபோவைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • பெண்கள் பட்டம் இறுதிச் சுற்றில் அர்மீனியாவின் எலினா டேனிலியனுடன் சமன் செய்த ஜார்ஜியாவின் நானா ஜானிங்ஜி என்பவரால் வெல்லப்பட்டது.

விஸ்வநாதன் ஆனந்த்

  • விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை 1988-ல் வென்றார். இவர் 2000 முதல் 2002 வரை FIDE உலக செஸ் சாம்பியன் ஷிப்பை வென்ற முதல் ஆசியர் ஆவார்.
  • இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கான உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னாவை 1991ல் பெற்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.
  • 2007-ல் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம விபூசன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு வீரர் என்ற முறையில் இவரே இவ்விருதினை முதன் முறையாகப் பெறுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்