முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தனது 33 ஆண்டு காலப் பாராளுமன்ற மாநிலங்களவை பதவியை நிறைவு முடித்துள்ளார்.
அவர் 1982-1985 ஆகிய காலக் கட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணி ஆற்றினார்.
அவர் முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
அவர் நரசிம்மராவ் அவர்களின் ஆட்சியில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் பணியாற்றினார்.
இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தியதில் மன்மோகன் சிங் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தார்.
அவர் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும், பல்கலைக் கழக மானியக் குழுவின் (UGC) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) போன்ற வேலை வாய்ப்பு உறுதித் திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி பெறும் உரிமை போன்ற பல சமூக நல முன்னெடுப்புகளை மேற்கொண்ட பெருமைக்குரியவர் மன்மோகன் சிங் ஆவார்.