TNPSC Thervupettagam

மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

November 1 , 2023 262 days 338 0
  • கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள மயில்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது.
  • இது மனித-விலங்கு மோதல்கள் அதிகரிக்க வழி வகுத்தது.
  • முட்புதர்களைக் குறைப்பதன் விளைவாக குள்ளநரிகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைவதே மயில்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
  • பருவநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பறவைகளால் அதிகம் விரும்பப் படும் வறண்ட பகுதிகளின் அதிகரிப்பு ஆகியவை மற்றொரு காரணமாக இருக்கலாம்.
  • இந்திய மயில் (பாவோ கிரிஸ்டேடஸ்) தேசியப் பறவையாகக் கருதப்படுகிறது.
  • இது 2022 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் முதல் அட்டவணையின் கீழ் மிக அதிகப் பாதுகாப்பு வழங்கப்படும் இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்