விஞ்ஞானிகள் இறைச்சிக் கோழிகளில் “மர மார்பக நோயை” ஏற்படுத்தக் கூடிய ‘லிப்போ புரோட்டீன் லிபேஸ்’ எனப்படும் ஒரு நொதியைக் கண்டறிந்துள்ளனர்.
இறைச்சிக் கோழிகளில் ஏற்படும் மர மார்பக நோய் என்பது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். இது இறைச்சிக் கோழியின் மார்பகத் தசை திசுக்களில் உண்டாகும் அசாதாரண கொழுப்புக் குவிப்பால் ஏற்படுகிறது.
இந்நோய் இறைச்சிக் கோழிகளைப் பாதிக்கும்போது, அது இறைச்சியை கடினமாகவும் மெல்லத் தக்கதாகவும் மாற்றுகின்றது.
இந்நோய் பறவைகளை சந்தைப்படுத்த முடியாததாக மாற்றி, அதனை வளர்ப்பவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.