பசுமைப் பரவலை மேம்படுத்தும் முயற்சியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள நிலங்களைப் புனரமைக்கும் முன்னெடுப்பாக ‘மரகதப் பூஞ்சோலை’ என்ற ஒரு அமைப்பினை நிறுவ வனத்துறை திட்டமிட்டுள்ளது.
சுமார் ஒரு ஹெக்டேர் நிலம் புனரமைக்கப்பட்டு மரக் கன்றுகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.
முதற்கட்டமாக வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள காலி நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக துறைமங்கலம் மற்றும் சாமியப்பா நகர் ஆகிய பகுதிகளில் மேலும் இரண்டு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.