TNPSC Thervupettagam

மரங்கள் மாற்றி நடுதல் கொள்கை – தில்லி

October 14 , 2020 1413 days 609 0
  • மரங்கள் மாற்றி நடுதல் கொள்கையைச் செயல்படுத்திய இந்தியாவின் முதலாவது மாநிலமாக தில்லி உருவெடுத்து உள்ளது.
  • மரங்கள் மாற்றி நடுதலில் அனுபவம் மற்றும் சரியான ஆவணம் போன்றவற்றைக் கொண்டுள்ள பிரத்தியேக அரசாங்க நிறுவனங்களைக் கொண்ட ஒரு குழுவானது இந்தக் கொள்கையின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
  • இதனுடைய தொடர்புடைய அந்த அரசு நிறுவனங்கள் அவற்றின் திட்டங்களினால் பாதிக்கப் பட்டுள்ள மரங்களில் 80% மரங்களைப் புதிய இடத்தில் நட வேண்டும்.
  • அரசானது மரம் நடுதல் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்காகவும் சோதனை செய்வதற்காகவும் சான்றளிப்பதற்காகவும் வேண்டி குடிமக்களை உள்ளடங்கிய உள்ளூர் சமுதாயங்களை அமைக்கவுள்ளது.
  • மாற்று மரம் நடுதலுக்கான பணவழங்கீடானது அதை உறுதி செய்வதற்காக ஒரு ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும். மேலும் மாற்றி நடப்பட்ட மரங்களில் 80% மரங்கள் நீடித்து நிலைத்து இருந்தால் அதற்கான கட்டணமானது குறைத்துக் கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்