மரபணு (ஜீனோம்) இந்தியா திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு லட்சிய மரபணு – குறியாக்கத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மரபணு என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான டி.என்.ஏ தொகுப்பைக் குறிக்கின்றது. அதில் அனைத்து மரபணுக்களும் உள்ளடங்கும்.
இந்த மரபணுக்களை குறியாக்கம் செய்வது என்பது ஒரு குரோமோசோமில் உள்ள இந்த மரபணுக்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதாகும்.
நீர்மத் திசுஅழற்சிமற்றும் டுச்சேன் தசைநார் டிஸ்டிராபி போன்ற ஒற்றை மரபணு மரபுவழி கோளாறுகளுக்குக் காரணமான மரபணுக்களைக் கண்டுபிடிக்க இது பயன்படுகின்றது.
ஜீனோம் (மரபணு) இந்தியா என்ற திட்டத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science - IISc) மற்றும் ஒரு சில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களும் கலந்து கொள்ள இருக்கின்றன.
ஒரு தன்னாட்சி நிறுவனமான IIScன் மூளை ஆராய்ச்சிக்கான மையமானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாகச் செயல்பட இருக்கின்றது.