TNPSC Thervupettagam

மரபணு படியெடுத்தல் மூலம் பிறந்த உலகின் முதல் ஆர்க்டிக் ஓநாய்

September 23 , 2022 669 days 398 0
  • சீனா முதன்முறையாக ஆர்க்டிக் வன ஓநாய் வகையினை மரபணு படியெடுத்தல் (குளோனிங்) மூலம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
  • இந்த உயிரினமானது அழிந்து போவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்பட்டது.
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓநாய்க்கு நல்ல ஆரோக்கியம் என்று பொருள் படும் மாயா என்று பெயரிடப்பட்டது.
  • இந்த ஓநாயின் செல் ஆனது, ஒரு ஆர்க்டிக் வன பெண் ஓநாயின் தோல் மாதிரியிலிருந்து பெறப்பட்டது.
  • இதன் கருமுட்டையானது ஒரு பெண் நாயிடமிருந்துப் பெறப்பட்டது.
  • இந்த ஆர்க்டிக் ஓநாய் ஆனது வெள்ளை ஓநாய் அல்லது துருவ ஓநாய் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது கனடாவின் குயின் எலிசபெத் தீவுகளின் உயர்மட்ட ஆர்க்டிக் துந்திரா காடுகளைத் தாயகமாகக் கொண்டதாகும்.
  • இது சாம்பல் நிற ஓநாயின் ஒரு துணை இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்