TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் – டிஜிபெளட்டி

June 2 , 2024 46 days 148 0
  • கிழக்கு ஆப்பிரிக்காவின் டிஜிபெளட்டி நாட்டில் மலேரியாவை எதிர்த்துப் போராடச் செய்வதற்காக மரபணு மாற்றப்பட்ட (GMO) கொசுக்கள் வெளியிடப்பட்டன.
  • அந்நாட்டில் மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்ற நிலையில் இது அவற்றின் பெண் சந்ததிகள் முதிர்ச்சியடைவதைத் தடுக்கும் ஒரு சிறப்பு மரபணுவைக் கொண்டுள்ளது.
  • இந்தச் செயல் முறையானது, முக்கியமாக மலேரியா பரவுவதற்கு காரணமாகின்ற பெண் கொசுக்களைக் குறி வைக்கிறது.
  • பெண் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், நோய் பரவுவதை கணிசமாகக் குறைக்க முடியும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
  • ஆண் கொசுக்கள் கடிக்காது எனவே அவற்றினால் மலேரியாவை பரப்ப முடியாது.
  • ஊடுருவிய கொசு வகையான அனோபிலிஸ் ஸ்டீபென்சியின் பரவலைத் தடுக்க ‘டிஜிபெளட்டிக்கு உகந்த கொசு கட்டுப்பாட்டுத் திட்டம்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் முதன்முதலில் அனோபிலிஸ் ஸ்டீபன்சி கண்டறியப் பட்டபோது, ​​டிஜிபெளட்டியில் 27 மலேரியா பாதிப்புகள் பதிவாகின.
  • 2020 ஆம் ஆண்டில், நாட்டின் மலேரியா பாதிப்பானது 73,000க்கும் அதிகமான எண்ணிக்கையைத் தாண்டியது.
  • கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு மரபணு மாற்றப்பட்ட கொசு வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதோடு புர்கினா பாசோ என்ற நாட்டிற்கு பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்படுவது இரண்டாவது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்