கிழக்கு ஆப்பிரிக்காவின் டிஜிபெளட்டி நாட்டில் மலேரியாவை எதிர்த்துப் போராடச் செய்வதற்காக மரபணு மாற்றப்பட்ட (GMO) கொசுக்கள் வெளியிடப்பட்டன.
அந்நாட்டில் மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்ற நிலையில் இது அவற்றின் பெண் சந்ததிகள் முதிர்ச்சியடைவதைத் தடுக்கும் ஒரு சிறப்பு மரபணுவைக் கொண்டுள்ளது.
இந்தச் செயல் முறையானது, முக்கியமாக மலேரியா பரவுவதற்கு காரணமாகின்ற பெண் கொசுக்களைக் குறி வைக்கிறது.
பெண் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், நோய் பரவுவதை கணிசமாகக் குறைக்க முடியும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
ஆண் கொசுக்கள் கடிக்காது எனவே அவற்றினால் மலேரியாவை பரப்ப முடியாது.
ஊடுருவிய கொசு வகையான அனோபிலிஸ் ஸ்டீபென்சியின் பரவலைத் தடுக்க ‘டிஜிபெளட்டிக்கு உகந்த கொசு கட்டுப்பாட்டுத் திட்டம்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் முதன்முதலில் அனோபிலிஸ் ஸ்டீபன்சி கண்டறியப் பட்டபோது, டிஜிபெளட்டியில் 27 மலேரியா பாதிப்புகள் பதிவாகின.
2020 ஆம் ஆண்டில், நாட்டின் மலேரியா பாதிப்பானது 73,000க்கும் அதிகமான எண்ணிக்கையைத் தாண்டியது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு மரபணு மாற்றப்பட்ட கொசு வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதோடு புர்கினா பாசோ என்ற நாட்டிற்கு பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்படுவது இரண்டாவது முறையாகும்.