ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த அறிவியலாளர்கள் மரபணு மாற்றப்பட்ட ஒரு புதிய வாழைப்பழ வகையினை உருவாக்கி வருகின்றனர் என்ற நிலையில் இது நீண்டதொரு ஆயுளைக் கொண்டிருக்கும் மற்றும் அதிக பழுப்பு நிறம் கொண்டதாக இருக்காது.
அதன் தோலினை உரித்த பிறகும் அவற்றின் பழம் 12 மணி நேரம் தன்மை மாறாமல் மஞ்சள் நிறத்திலேயே இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
பாலிஃபீனால் ஆக்சிடேஸின் உற்பத்தியினை முடக்கும் வகையில், வாழைப்பழத்தின் மரபணுக்களில் அக்குழு துல்லியமான மாற்றங்களை செய்துள்ளது.
வாழைப்பழங்கள் ஆனது அடர்World’s Oldest Impact Crater பச்சை நிறத்தில் தொடங்கி, சுவை மிகு மஞ்சள் நிறமாக மாறி, முடிவில் (முன்னதாகவே உட்கொள்ளாவிட்டால்) விரும்பத் தகாத பழுப்பு நிறத்தில் மாறுகின்ற ஒரு வண்ணமயமான வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டுள்ளன.
இந்த மாற்றங்கள் ஆனது, அந்தப் பழங்கள் பழுக்கும் செயல்முறையின் விளைவாக ஏற்படுகின்றன என்பதோடு இது எத்திலீன் எனப்படும் ஹார்மோனால் ஏற்படுகிறது.
பாலிஃபீனால் ஆக்சிடேஸ் (PPO) என்ற நொதியின் உற்பத்தியுடன் தொடர்புடைய ஒரு எத்திலீனுடனான ஒரு மரபணு மாற்றமானது, இது தொடர்புடைய பல மரபணுக்களின் செயல்பாட்டைத் தூண்டுகிறது.