தற்போது இவை அங்கீகரிக்கப் பட்டவை இல்லை என்றாலும், விவசாயிகள் தற்போதைய காரீப் பருவத்தில், மக்காச்சோளம், சோயாபீன், கடுகு, கத்திரிக்காய் மற்றும் களைக்கொல்லி எதிர்ப்புப் பருத்தி ஆகிய பயிர்களுக்கு வேண்டி மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பெருமளவில் விதைப்பார்கள்.
மரபணுப் பொறியியலானது விதைகளில் ஓர் அன்னிய மரபணுவை அறிமுகப் படுத்துவதன் மூலம் மரபணுத் தடைகளை மீறி விரும்பிய விளைவுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அன்னிய மரபணுவானது ஒரு தாவரம், ஒரு விலங்கு அல்லது ஒரு மண் பாக்டீரியம் ஆகியவற்றிலிருந்து கூட தேர்ந்தெடுக்கப் படலாம்.
பிடி பருத்தி மட்டுமே இந்தியாவில் அனுமதிக்கப்படும் ஒரே மரபணு மாற்றப்பட்ட பயிராகும்.
இந்தியாவில், மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு என்பது மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வணிக ரீதியாகப் பயிரிட அனுமதிக்கும் ஓர் உச்ச அமைப்பாகும்.