TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்டப் பயிர்களுக்கான ஆராய்ச்சி விதிமுறைகள்

May 24 , 2022 824 days 682 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறையானது, மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிர்களின் மரபணுக்களை மாற்ற அயல் மரபணுக்களைப் பயன்படுத்தச் செய்வதற்கான சவால்களைத் தவிர்ப்பது ஆகியவற்றிற்கான விதிமுறைகளை தளர்த்தும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது .

மரபணு மாற்றப்பட்ட தாவரங்களின் பாதுகாப்பு மதிப்பீடு- 2022

  • இந்த வழிகாட்டுதல்களானது, இந்தியாவில் மரபணு மாற்றத் தொழில்நுட்பங்களின் மேம்பாடு மற்றும் நிலையானப் பயன்பாட்டிற்கான செயற்திட்டமாகும்.
  • மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தாவரத்தின் மரபணுவை மாற்றி அமைக்கும்.
  • ஆராய்ச்சியாளர்களுக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதியைப் பெறுவதில் இருந்து இது விலக்கு அளிக்கிறது.
  • மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய அனைத்து விதிமுறைகளும், மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதி தேவைப்படுகின்ற உட்பிரிவுகளைத் தவிர மற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளுக்குப் பொருந்தும் என்று இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்