TNPSC Thervupettagam
June 8 , 2019 1870 days 686 0
  • ஹெச்ஐவி கிருமியிலிருந்து ஏற்படும் தொற்றிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பை ஏற்படுத்தும் முயற்சியில் சீன ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹூ ஒரு குறிப்பிட்ட மரபணுவை மாற்றம் செய்திட மருத்துவ ரீதியில் சோதிக்கப்படாத ஒரு மரபணு மாற்றம் செய்யும் கருவியை (CRISPR- Cas9) பயன்படுத்தியுள்ளார்.
  • இவர் இரட்டைப் பெண் கருவில் CCR5 என்றழைக்கப்படும் ஒரு மரபணுவை மாற்றம் செய்து அதை செயலிழக்கச் செய்தார்.
  • CCR5 மரபணுவானது செல்களில் ஹெச்ஐவி கிருமியை உள்ளே புகுத்திடவும் செல்களைத் தாக்கிடவும் அனுமதிக்கும் ஒரு புரதத்தினைக் குறியிடுகின்றது.
  • செயல்பாட்டிலிருக்கும் ஒரு CCR5 மரபணு இல்லாத குழந்தைகள் ஹெச்ஐவி கிருமியின் தொற்றிற்கு எதிர்ப்பு உடையவர்களாகத் திகழ்வர்.
  • இந்த முயற்சியைப் பற்றி நீதி நெறிமுறை பற்றிய கருத்துகள் எழுப்பப்பட்டன.
  • அதனால் சீன அரசு மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தில் கடுமையான விதிமுறைகளைப் புகுத்தியிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்