TNPSC Thervupettagam

மரபணு வரைபடமிடல் – இந்தியப் பெருங்கடல்

March 17 , 2021 1224 days 624 0
  • இந்தியப் பெருங்கடலில் பெருங்கடலியலுக்கான தேசிய நிறுவனம் தனது இத்தகைய முதல் வகை திட்டமான மரபணு வரைபடமிடல் திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
  • இதன் முக்கிய நோக்கம் இந்தியப் பெருங்கடலில் உள்ள நுண்ணுயிரிகளின் மரபணு படங்களின் மாதிரிகளைச் சேகரித்தலாகும்.
  • அது மட்டுமின்றி, காலநிலை மாற்றம், ஊட்டச் சத்திற்கான நெருக்கடி, அதிகரிக்கும் மாசுபாடு போன்றவற்றில் இந்தியப் பெருங்கடலின் எதிர்வினை மற்றும் அதன் உயிரி வேதியியல் பற்றி புரிந்து கொள்வதும் இன்றியமையாத ஒன்றாகும்.
  • இதன் நன்மைகள் பின்வருமாறு
    • இது சூழலியல் அமைப்புகளைப் புரிந்து கொள்ள உதவும்
    • இது காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளைப் புரிந்து கொள்ள உதவும்.
    • இது இந்தியப் பெருங்கடலின் கனிம வளங்கள் பற்றி அறிய உதவும்.
  • மொத்த புவிப்பரப்பில் இந்தியப் பெருங்கடல் 20% பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இது உலகின் மூன்றாவது பெரிய நீர்நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்