ஐக்கிய நாடுகள் சபையின் 16வது பங்குதாரர்கள் (COP16) இயற்கை உச்சி மாநாட்டில், உறுப்பினர் நாடுகள் ஆனது, எண்ணிம மரபணு வரிசையாக்கத் தகவல் (DSI) என அறியப்படும் இயற்கையிலிருந்து பெறப்படும் மரபணு தகவல்களைப் பயன்படுத்தச் செய்வதற்கான ஒப்பந்தம் குறித்தப் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள உள்ளன.
DSI என்பது உயிரினங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில மரபணுக் குறியீடுகளின் எண்ணிம உருவமைப்பினைக் குறிக்கிறது.
இந்த மரபணு வரிசையாக்கமுறைகள் ஆனது எண்ணிம மயமாக்கப்பட்டு, பொதுத் தரவுத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அனைத்து ஆய்வாளரும் பயன்படுத்தும் வகையில் அவை சேமிக்கப் படுகின்றன.
COP16 நாடுகளின் பேச்சுவார்த்தைகள் ஆனது அசல் மாதிரிகள் மற்றும் மாதிரிகளைச் சேதப்படுத்தாமல், இந்த எண்ணிம தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது.
DSI தகவலைப் பயன்படுத்தும் முக்கியத் துறைகளின் வருடாந்திர வருமானத்தில் 0.1% முதல் 1% வரையில் விதிக்கப்படும் கட்டணம் ஆனது ஆண்டிற்கு 1 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரையிலான வருமானத்தினை ஈட்டும்.