TNPSC Thervupettagam

மராத்தா இட ஒதுக்கீடு

June 29 , 2019 1850 days 665 0
  • சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப்பட்டோர் சட்டம் 2018 என்ற சட்டத்தின் கீழ் மராத்தாச் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மகாராஷ்டிரா அரசின் முடிவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • ஆனால் இச்சமூகத்திற்கு மாநில அரசால் வழங்கப்பட்ட 16 சதவிகித இட ஒதுக்கீடு “நியாயமற்றது” (நீதிக்கு முரணானது) என்று கூறியுள்ளது.
  • உயர் நீதிமன்றம் கல்விக்கு 12 சதவிகித இட ஒதுக்கீட்டையும், அரசு வேலைக்கு 13 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அளித்து முந்தைய இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தைக் குறைத்துள்ளது.
  • கூடுதலாக வழங்கப்பட்ட 12-13 சதவிகித மராத்தா இட ஒதுக்கீடானது, அம்மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீட்டை 64–65 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளது. இந்த இட ஒதுக்கீடானது, இந்திரா சௌகானி வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டை விடவும் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்