கென்யா நாட்டினைச் சேர்ந்த கெல்வின் கிப்டம் சமீபத்தில் நடைபெற்ற சிகாகோ மராத்தான் ஆடவர் போட்டியில் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
அவர் ஓட்டப் பந்தயத்தை இரண்டு மணி நேரம் 35 வினாடிகள் என்ற வகையில் ஒரு அதிகாரப் பூர்வமற்ற நேரக் கணக்கில் நிறைவு செய்தார்.
2022 ஆம் ஆண்டு பெர்லின் மாரத்தான் போட்டியில் 2:01:09 என்ற நேரத்தில் பந்தயத்தினை நிறைவு செய்து வெற்றி பெற்ற கென்யா நாட்டினைச் சேர்ந்த எலியுட் கிப்சோஜ் என்பவரின் பழைய உலக சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
பழைய சிகாகோ மராத்தான் சாதனையானது 2013 ஆம் ஆண்டில் 2:03:45 என்ற நேரக் கணக்கில் கென்யா நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் கிமெட்டோ என்பவரால் நிகழ்த்தப் பட்டது.
நெதர்லாந்து நாட்டு ஓட்டப் பந்தய வீராங்கனையான சிஃபான் ஹசன் சிகாகோ மராத்தான் மகளிர் போட்டியில் இரண்டு மணி நேரம், 13 நிமிடங்கள் மற்றும் 44 வினாடிகள் ஒரு அதிகாரப் பூர்வமற்ற நேரக் கணக்கில் நிறைவு செய்து பட்டத்தினை வென்றார்.
மராத்தான் போட்டியின் வரலாற்றில் எத்தியோப்பியன் டிஜிஸ்ட் அசெபாவுக்குப் பிறகு அதிவிரைவான நேரத்தில் பந்தயத்தினை நிறைவு செய்த இரண்டாவது பெண்மணி இவர் ஆவார்.