மராத்திய காலாட் படை (Maratha light infantry) தன்னுடைய 250வது படைப்பிரிவு தினத்தை பிப்ரவரி 4 ஆம் தேதி கொண்டாடியுள்ளது.
இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் பல்வேறு இராணுவப் பதக்க கௌரவங்களை உடைய காலாட் படைகளில் மராத்திய காலாட் படையும் ஒன்றாகும்.
1768 ஆம் ஆண்டு மராத்திய காலாட் படை உருவாக்கப்பட்டது. இது பின்னாளில் ஜன்கிபால்டன் (jangipaltan) என்றழைக்கப்பட்டது.
மராத்திய காலாட்படை பிரிவு தினமாக பிப்ரவரி 4 ஆனது பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் 1670ஆம் ஆண்டு இந்நாளில் தான் மராத்திய சத்ரபதி சிவாஜி கொன்டானா கோட்டையை கைப்பற்றினார்.
இக்கோட்டையானது சின்கர் (Sinhgarh) எனவும் பிரபலமாக அழைக்கப்படுகின்றது.