ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாநகராட்சியில் கங்கினேனி செருவு ஏரிப் பகுதியில் "மருது பாண்டியர் சகோதரர்கள்" சிலைகளை நிறுவ பூமி பூஜை செய்யப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பெரிய மருது மற்றும் சின்ன மருது எனப்படும் மருது சகோதரர்கள் சிவகங்கை மண்டலத்தினை ஆட்சி செய்தனர்.
மருது சகோதரர்கள், பிரித்தானிய அரசிற்கு எதிராக, தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வங்காளம் வரையிலான கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த பிரித்தானிய எதிர்ப்புப் படைகளை ஒன்றிணைக்கும் முயற்சியைத் தொடங்கி, சுதந்திரப் போராட்டத்தினை நடத்துவதற்காக ஆயுதப் படையை எழுப்பினர்.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டில் சிறை பிடிக்கப் பட்டு சிவகங்கை அருகே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.