TNPSC Thervupettagam

மருது சகோதரர்களுக்கு சிலை

January 25 , 2024 305 days 365 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாநகராட்சியில் கங்கினேனி செருவு ஏரிப் பகுதியில் "மருது பாண்டியர் சகோதரர்கள்" சிலைகளை நிறுவ பூமி பூஜை செய்யப்பட்டது.
  • 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பெரிய மருது மற்றும் சின்ன மருது எனப்படும் மருது சகோதரர்கள் சிவகங்கை மண்டலத்தினை ஆட்சி செய்தனர்.
  • மருது சகோதரர்கள், பிரித்தானிய அரசிற்கு எதிராக, தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வங்காளம் வரையிலான கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த பிரித்தானிய எதிர்ப்புப் படைகளை ஒன்றிணைக்கும் முயற்சியைத் தொடங்கி, சுதந்திரப் போராட்டத்தினை நடத்துவதற்காக ஆயுதப் படையை எழுப்பினர்.
  • தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டில் சிறை பிடிக்கப் பட்டு சிவகங்கை அருகே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்