TNPSC Thervupettagam

மருத்துவத் துறைக்கான புதியத் திட்டம்

November 14 , 2024 11 days 70 0
  • மருத்துவ சாதனத் தொழில் துறையினை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு ஆனது 500 கோடி ரூபாயில் மத்தியத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
  • இது வளர்ச்சியை விரைவுபடுத்தி, இறக்குமதியினைச் சார்ந்திருக்கும் நிலையினைக்  குறைத்து, மருத்துவச் சாதனங்களின் ஒரு முன்னணி ஏற்றுமதியாளராக இந்தியாவின் நிலையை மேம்படுத்தும்.
  • இந்தியாவின் மருத்துவச் சாதனச் சந்தையின் மதிப்பு தோராயமாக 14 பில்லியன் டாலர் மற்றும் 2030 ஆம் ஆண்டில் சுமார் 30 பில்லியன் டாலராக உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
  • இந்தப் புதிய திட்டம் ஆனது ஐந்து துணைத் திட்டங்களைக் கொண்டுள்ளது-
    • மருத்துவச் சாதன உற்பத்தித் தொகுதிகளுக்கான பொதுவான வசதிகள்,
    • இறக்குமதியினைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான பல்துறை முதலீட்டுத் திட்டம்
    • மருத்துவச் சாதனங்களுக்கான திறன் உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு.
    • மருத்துவச் சாதன மருத்துவ ஆய்வுகள் ஆதரவு திட்டம் மற்றும்
    • மருத்துவச் சாதன உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்