மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024
October 11 , 2024
75 days
168
- அறிவியலாளர்கள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோர் 2024 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
- மரபணுச் சீரமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் சிறிய ஆர்என்ஏ மூலக்கூறுகளின் புதிய வகுப்பான நுண் RNAவினை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இது மனிதர்கள் உட்பட பல செல் உயிரினங்களுக்கு இன்றியமையாததாக மாறிய முற்றிலும் புதிய மரபணு சீரமைப்புக் கட்டமைப்பினை வெளிப்படுத்தியது.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண் RNAக்களுக்கான மனித மரபணுக் குறியீடுகள் இதன் மூலம் தற்போது அறியப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
Post Views:
168