ஹைதராபாத்தின் இந்திய பொது சுகாதார நிறுவனம் (Indian Institute of Public Health Hyderabad - IIPH - H) மருத்துவப் பொருட்களுக்கான விநியோகத்திற்கு ட்ரோன் விநியோக முறையினை உருவாக்கி வருகிறது.
IIPH-H நிறுவனம் அமெரிக்காவைச் சார்ந்த புகழ்மிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட தடுப்பூசிப் பெட்டியினை (Temperature Controlled vaccine box) உருவாக்கும் செயல்முறையில் இணைந்து செயல்படுகிறது.
இந்த டிஜிட்டல் ட்ரோன் அடிப்படையிலான மேம்பட்ட நிகழ்நேர மருத்துவ கூறுநிலை திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பின் (Real-Time Advanced Medical Modular Logistics system - 2 DREAM) நோக்கம், தொலைதூர பகுதிகளை சென்றடைதல் மற்றும் வெப்ப உணர்திற கலன்களை 30 நிமிடங்களில் விநியோகம் செய்தல் ஆகியன ஆகும்.