TNPSC Thervupettagam

மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு

October 12 , 2020 1384 days 678 0
  • இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே ஆல்டர் மற்றும் சார்லஸ் எம் ரைஸ் மற்றும் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹொவ்க்டன் ஆகியோருக்கு மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
  • ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு இந்த விருது  வழங்கப் பட்டுள்ளது.
  • ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களால் விளக்க முடியாத இரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸின் முக்கிய ஆதாரத்தை விளக்க இந்த மூவரின் பணி உதவி இருக்கின்றது.
  • இவர்களது கண்டுபிடிப்பின் காரணமாக, வைரஸிற்கான அதிக உணர்திறன் வாய்ந்த இரத்தப் பரிசோதனைகள் இப்போது கிடைக்கின்றன. இவை அடிப்படையில் உலகின் பல பகுதிகளிலும் பரிமாற்றத்திற்குப் பிந்தைய ஹெபடைடிஸை (Post-transfusion hepatitis) நீக்கி, உலக ஆரோக்கியத்தைப் பெரிதும் மேம்படுத்தி வருகின்றன.
  • இவர்களின் கண்டுபிடிப்பானது ஹெபடைடிஸ் சி வைரஸிற்கு எதிரான மருந்துகளின் விரைவான வளர்ச்சியை அனுமதித்துள்ளது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக, தற்போது இந்த நோயைக் குணப்படுத்த இயலும்.

ஹெபடைடிஸ் பற்றி:

  • ஹெபடைடிஸ் என்பது கல்லீரலின் ஒரு அழற்சியாகும்.
  • இந்த நிலை தானாகக் குறையலாம் அல்லது இழைநார்ப் பெருக்கம் (ஃபைப்ரோஸிஸ்), கல்லீரல் இழைநார் வளர்ச்சி (சிரோசிஸ்) அல்லது கல்லீரல் புற்றுநோய் என்ற நிலைக்கு முன்னேறலாம்.
  • ஹெபடைடிஸ் வைரஸ்களே ஹெபடைடிஸ் நோயிற்குப் பொதுவான ஒரு காரணமாகும். ஆனால் பிற நோய்த்தொற்றுகள், நச்சுப் பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்களும் (auto immune diseases ) ஹெபடைடிஸை ஏற்படுத்தும்.
  • ஹெபடைடிஸ் வைரஸ்களில் ஐந்து முக்கிய வகைகள் உள்ளன. அவை ஏ, பி, சி, டி மற்றும் ஈ ஆகும்.
  • ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ பொதுவாக கேடான உணவு அல்லது அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படுகின்றன.
  • ஹெபடைடிஸ் பி, சி மற்றும் டி ஆகியவை பாதுகாப்பற்ற இரத்தப் பரிமாற்றம் அல்லது அசுத்தமான ஊசிகள், உடலுறவு அல்லது தாயிடமிருந்து குழந்தைக்கு ஆகிய முறைகளில்  பரவுகின்றன.
  • ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி ஆகிய இரண்டும் தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடியவை ஆகும்.
  • ஆனாலும் ஹெபடைடிஸ் சி-க்கு தடுப்பூசி ஏதும் இல்லை.
  • இருப்பினும், இது வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சையளிக்கப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்