TNPSC Thervupettagam

மருந்தியல் குறிப்பேடு கலந்துரையாடல் குழு

October 22 , 2023 273 days 171 0
  • இந்திய மருந்தியல் குறிப்பேடு ஆணையம் (IPC) ஆனது மருந்தியல் குறிப்பேடு கலந்துரையாடல் குழுவில் (PDG) இணைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட தொடக்கக் கட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் ஒரே மருந்தியல் குறிப்பேடு அமைப்பு இந்திய மருந்தியல் குறிப்பேடு ஆணையம் ஆகும்.
  • மருந்தியல் குறிப்பேடு குழுவானது (PDG)  ஆனது 1989 ஆம் ஆண்டில் ஐரோப்பிய, ஜப்பானிய மற்றும் அமெரிக்க மருந்தியல் குறிப்பேடு நிறுவனங்களால் நிறுவப் பட்டது.
  • உற்பத்தியாளர்கள் மீதான சுமையை குறைப்பதற்கும் நிலையான தரத்தை உறுதி செய்வதற்கும் உலகளாவிய மருந்தியல் குறிப்பேட்டுத் தரநிலைகளை இணக்கம் ஆக்குவதை PDG நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2001 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது ஒரு பார்வையாளர் அமைப்பாக இதில் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்