TNPSC Thervupettagam

மருந்து சட்டத்தின் 170வது விதி

September 6 , 2024 33 days 86 0
  • 1945 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் 170வது விதி நீக்கப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடை நிறுத்தியுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதியானது, AYUSH தயாரிப்புகளின் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 170வது விதியானது நாட்டில் மருந்துகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை மேலாண்மை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது "குறிப்பாக ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துகளின் பொருத்தமற்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக" உருவாக்கப்பட்டது.
  • AYUSH மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை அங்கீகாரமின்றியும், மாநில உரிம ஆணையத்தின் தனிப்பட்ட அடையாள எண் இல்லாமலும் விளம்பரப் படுத்துவதை இந்த விதி தடை செய்கிறது.
  • அலோபதி மருந்துகளைப் போலவே, AYUSH மருந்து உற்பத்தியாளர்களும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் உரிமம் பெற வேண்டும்.
  • மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின்படி, புதிய அலோபதி மருந்துகளின் ஒப்புதலுக்கான I, II, மற்றும் III கட்ட சோதனைகள், ஒரு மருந்து சந்தைப் படுத்தப் படுவதற்கு முன் நடத்தப்பட வேண்டும்.
  • இருப்பினும், AYUSH மருந்துகளுக்கு இத்தகையச் சோதனைகள் அவசியமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்