1945 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் 170வது விதி நீக்கப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடை நிறுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதியானது, AYUSH தயாரிப்புகளின் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
170வது விதியானது நாட்டில் மருந்துகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை மேலாண்மை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது "குறிப்பாக ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துகளின் பொருத்தமற்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக" உருவாக்கப்பட்டது.
AYUSH மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை அங்கீகாரமின்றியும், மாநில உரிம ஆணையத்தின் தனிப்பட்ட அடையாள எண் இல்லாமலும் விளம்பரப் படுத்துவதை இந்த விதி தடை செய்கிறது.
அலோபதி மருந்துகளைப் போலவே, AYUSH மருந்து உற்பத்தியாளர்களும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் உரிமம் பெற வேண்டும்.
மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின்படி, புதிய அலோபதி மருந்துகளின் ஒப்புதலுக்கான I, II, மற்றும் III கட்ட சோதனைகள், ஒரு மருந்து சந்தைப் படுத்தப் படுவதற்கு முன் நடத்தப்பட வேண்டும்.
இருப்பினும், AYUSH மருந்துகளுக்கு இத்தகையச் சோதனைகள் அவசியமில்லை.