மருந்து முறைகேடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கான சர்வதேச எதிர்ப்பு தினம் - ஜூன் 26
June 30 , 2018 2339 days 540 0
உலகம் முழுவதும் மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சட்ட விரோத மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி மருந்து முறைகேடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கான சர்வதேச எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது அலுவல் ரீதியாக ஐ.நா.வால் தொடங்கி வைக்கப்பட்டது. டிசம்பர் 1987-ல் ஐ.நா.பொது அவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
சீனாவில் நடைபெற்ற முதல் ஓபியப் போருக்குச் (1839-42) சற்று முன்னர் கியாங்டோங்கின் ஹியூமென்னில் ஓபிய வர்த்தகத்தை தடை செய்தவரான Lin Xexu
(சீனா அறிஞர் மற்றும் குயிங் வம்சத்தின் அதிகாரி) என்பவரது நினைவாக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.