மருந்துகளை உட்செலுத்தும் சிகிச்சைக்கான இணையவழிப் பயிற்சி
August 15 , 2017 2761 days 999 0
உலகளாவிய நிறுவனமான உட்செலுத்துதலுக்கான செவிலியர்கள் சங்கம் (Infusion Nurses Society - INS) செவிலியர்களுக்காக மருந்துகளை உட்செலுத்தும் சிகிச்சைக்கான இணையவழி பயிற்சியை இந்தியாவில் முதன்முதலில் தொடங்கி உள்ளது. இதன் நோக்கம் 3,000 க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகும்.
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் உள்ள செவிலியர்களை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சியாக இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பத்தில் ஒன்பது பேர் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருக்கும் போது மருந்துகளை உட்செலுத்தும் சிகிச்சை அளிக்கப்படும்.
தவறான உட்செலுத்துதல் நடைமுறைகள் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் . இதனால் இறப்பு, நோயின் அறிகுறிகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.