TNPSC Thervupettagam

மருந்துகளை உட்செலுத்தும் சிகிச்சைக்கான இணையவழிப் பயிற்சி

August 15 , 2017 2529 days 854 0
  • உலகளாவிய நிறுவனமான உட்செலுத்துதலுக்கான செவிலியர்கள் சங்கம் (Infusion Nurses Society - INS) செவிலியர்களுக்காக மருந்துகளை உட்செலுத்தும் சிகிச்சைக்கான இணையவழி பயிற்சியை இந்தியாவில் முதன்முதலில் தொடங்கி உள்ளது. இதன் நோக்கம் 3,000 க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகும்.
  • இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் உள்ள செவிலியர்களை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சியாக இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பத்தில் ஒன்பது பேர் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருக்கும் போது மருந்துகளை உட்செலுத்தும் சிகிச்சை அளிக்கப்படும். தவறான உட்செலுத்துதல் நடைமுறைகள் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் . இதனால் இறப்பு, நோயின் அறிகுறிகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்